'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' – ஆர்.கே.செல்வமணி உருக்கம்

Spread the love

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

செல்வமணி
செல்வமணி

அந்தவகையில் விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ” திரைப்பட தொழிலாளருக்கு வாழ்க்கை முழுக்க தொண்டாற்றியவர் விஜயகாந்த் சார்.

படப்பிடிப்பு தளங்களில் எல்லாருக்கும் என்ன உணவோ …அதுதான் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரோட கிட்டத்தட்ட 30 வருடம் பயணம் செய்திருக்கிறோம். அவரை மாதிரி ஒரு சிறந்த மனிதரைப் பார்த்ததே இல்லை. அவர் தாயுள்ளம் கொண்ட ஒரு ஆண் மகன்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி
ஆர்.கே.செல்வமணி

பார்க்க கரடு முரடாகத் தான் தெரிவார். ஆனால் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் பழகக்கூடியவர். இன்று திரைப்படத் துறையில் 50 பேர் இயக்குநராகவும், 75 பேர் தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் சார் தான். 100 ஆண்டுகளைக் கடந்தும் கூட அவர் புகழ் நிலைத்து நிற்கும்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *