தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கை: குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேச்சு | National Education Policy that emphasizes mother tongue

1377765
Spread the love

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா​வில் பல்​வேறு படிப்​பு​களில் சிறந்து விளங்​கிய 304 மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ர​வி,பதக்​கங்​கள், சான்​றிதழ்​கள் வழங்​கி​னார். தாய்​மொழிக்​கு தேசிய கல்விக் கொள்கை முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறது என்று குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேசி​னார்.

தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் 16-வது பட்​டமளிப்பு விழா சென்​னை​யில் உள்ள அதன் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலைமை தாங்​கி​னார். இந்த விழா​வில் 3,007 இளநிலை, 3,098 முது​நிலை உட்பட 7,972 மாணவ, மாணவி​கள் பட்​டம் பெற்​றனர். இதில் பதக்​கங்​களை வென்ற 304 மாணவர்​களுக்கு ஆளுநர் ரவி பட்​டங்​களை வழங்​கி​னார். மேலும், ஆசி​யா​வுக்​கான காமன்​வெல்த் கல்வி ஊடக மையம் விருதை மாணவி திவ்யா பெற்​றார்.

நிகழ்ச்​சி​யில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற குஜ​ராத் டாக்​டர் பாபா சாகேப் அம்​பேத்​கர் திறந்​தநிலை பல்​கலைக்​கழக துணைவேந்​தர் உபாத்​யாயா பேசி​ய​தாவது: மாணவர்​கள் பட்​டம் பெறு​வது மகிழ்ச்​சி​யாக உள்​ளது. இவர்​கள் நம்​நாட்​டின் வளர்ச்​சிக்​காக தங்​கள் பங்​களிப்பை வழங்​கு​வார்​கள் என்ற நம்​பிக்கை இருக்​கிறது. தேசிய கல்விக் கொள்கை பட்​டப்​படிப்​பில் பல்​வேறு நுழைவு​கள், வெளி​யேற்​றத்தை வலி​யுறுத்​துகிறது. நான் இலக்​கி​யம் படிக்​கும்​போது, பிஎச்டி தேர்வு செய்ய வேண்​டும் என்று விரும்​பினேன். மேலும், பாரம்​பரிய நடன கலைஞ​ராக​வும் இருக்​க​வும் எண்​ணினேன். எனது யோசனையை அனை​வரும் பாராட்​டினர். ஆனால், அப்​போது அது சாத்​தி​யமில்​லாமல் போனது.

தற்​போது தேசிய கல்விக் கொள்கை அனைத்​தி​லும் மாற்​றத்தை கொண்டு வந்​துள்​ளது. உலகில் 7 பழமை​யான மொழிகளில் சமஸ்​கிருதம், தமிழ் இருப்​பது மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. தேசிய கல்விக் கொள்கை தாய் மொழி, பிராந்​திய மொழிகளுக்கு முக்​கி​யத்​து​வம் வழங்​கு​கிறது. 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் உங்​கள் கையில் உள்​ளது. நீங்​கள்​தான் நாட்டை வடிவ​மைக்க வேண்​டும். தற்​போது, உலகள​வில் ஏஐ எனும் செயற்கை நுண்​ணறிவு தாக்​கம் அதி​க​முள்​ளது. செயற்கை நுண்​ணறிவு மனித அறிவை மீற முடி​யாது. நமது வாழ்க்கை பயணத்​தில், ஆன்​மீக உண்​மையை நம்​முள் உணர்​வதே இறுதி நிலை​யாகும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

அமைச்​சர் புறக்​கணிப்பு: பல்​கலைக்​கழக துணைவேந்​தர் நியமன விவ​காரத்​தில் தமிழக அரசுக்​கும், ஆளுநர் ரவிக்​கும் இடையே முரண்​கள் நில​வு​கின்​றன. இதன்​காரண​மாக கடந்த சில ஆண்​டு​களாகவே மாநில பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழாக்​களை, இணைவேந்​த​ரான உயர்​கல்​வித்​துறை அமைச்​சர்​கள் புறக்​கணித்​து​ வரு​கின்​றனர். அந்​தவகை​யில் நேற்​றும் திறந்​தநிலை பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழாவை தற்​போது உயர்​கல்​வித் துறை அமைச்​ச​ராக உள்ள கோவி.செழியன் புறக்​கணித்​தார். தொடரும் இந்த மோதல் போக்கு எப்​போதும் முடி​யும் என கல்​வி​யாளர்​கள் கவலை தெரி​வித்​தனர். இதற்​கிடையே நேற்​றைய பட்​டமளிப்பு விழா​வில் கோவையைச் சேர்ந்த கேபிஆர் மில் லிமிடெட் நிறு​வனத்​தின் சார்​பில் 610 தொழிலா​ளர்​கள் பட்​டம் பெற்​றனர். இதில்​ 17 பேர்​ பதக்​கங்​களை பெற்​றனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *