தாய் கிழவி: “இது ஒரு மிக முக்கியமான முற்போக்கான திரைப்படம்”- ஜோதிகா பாராட்டு| Thaai Kizhavi: “This is a very important progressive film” – Jyothika praises

Spread the love

உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது!

ராதிகா சரத்குமார் அவர்களுக்கு – உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது! மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

‘தாய் கிழவி’ கதாபாத்திரம் வலிமையானது மற்றும் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல, மிகவும் க்யூட்டான ஒன்றும்கூட. திரைக்குப் பின்னால் இருக்கும் உங்கள் நிஜமான குணாதிசயத்தின் பிரதிபலிப்புதான் இந்த கதாபாத்திரம்.

பெருமைப்பட வேண்டிய தருணம்

உங்கள் உடல்மொழி, ஸ்டைல், வெகுளித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்திலும் இதயத்தை வென்றிருக்கிறீர்கள். நடிப்பில் உங்களைத் தனித்துக் காட்டும் அந்தச் சிறு சிறு அசைவுகள் அற்புதம்.

என்னைப் பொறுத்தவரை, ‘தாய் கிழவி’ என்பது ஒரு பெண் மைய பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல; இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு.

‘தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது” என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *