தாய் தகப்பன் மாதிரி ஆறுதலா இருந்தான்..நொடிப் பொழுதுல பறி கொடுத்துட்டேன்! – கலங்கும் தேவி பிரியா

Spread the love

சீரியல் நடிகை தேவி பிரியா பயணம் செய்த கார் திருச்சி அருகே விபத்தில் சிக்கியதில் அவரது உதவியாளரும் டிரைவருமான முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த இன்னொரு ஆக்டிங் டிரைவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மரணமடைந்த முத்து கணேஷின் சொந்த ஊர் ராஜபாளையம். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

முத்து கணேஷ் உடலடக்கம் முடிந்ததும் திருச்சி மருத்துவமனையிலிருக்கும் திவாகர் என்ற அந்த ஆக்டிங் டிரவைரச் சந்திக்க கிளம்பிக் கொண்டிருந்த தேவி பிரியாவிடம் பேசினோம்.

 தேவி பிரியா

தேவி பிரியா

“‘சினிமாக் கனவுகளூடன் சென்னைக்கு வந்தவந்தான். பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்கிட்ட வந்தான். உதவியாளர், டிரைவர், மேக் அப் மேன் என எல்லா வேலைகளையும் செய்தாலும். நான் என் குடும்பத்துல ஒருத்தனாத்தான் அவன் கிட்டப் பழகினேன்.

அவனுமே சகோதரனா நண்பனா ஏன் கஷ்டமான சந்தர்ப்ப்பங்கள்ல தாய் தகப்பன் மாதிரி ஆறுதலாப் பேசறவனா இருந்தான். எனக்குத் தெரிஞ்ச இடங்களில் அவனுக்காக நான் பேசியிருக்கேன். சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்கவும் செய்திருக்கான். பெரிய கனவோட இருந்தான். சமீபத்துலதான் கல்யாணமும் நடந்திச்சு. ஆனா இப்படியொரு துயரம் நடக்கும்னு நாங்க நினைச்சுக்கூடப் பார்க்கலையே’ எனக் கலங்கியபடி பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *