திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

dinamani2F2025 09 272Fhc8rv1vj2Fvijay1
Spread the love

கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டபோது ஊடகங்களில் வெளியான நேரலைக் காட்சிகளிலிருந்து விடியோக்கள் ஆதாரங்களாக எடுத்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல்லில் பலர் மயக்கமடைந்த விழுந்த போது அவர்களுக்கு உதவிய காவல்துறை மற்றும் போலீசாருக்கு விஜய் நன்றி கூறும் விடியோ என சமூக வலைத்தளங்களில் வெளியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட குழுவில், இருந்த சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கூறுகையில், கரூரில், விஜய் வருவதற்கு காலதாமதமான நிலையில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அப்போது, தவெக கட்சியின் தலைவர் வரும்போது பின்தொடர்ந்த கூட்டமும் ஏற்கனவே இருந்த கூட்டமும் சேர்ந்தபோது திடீரென நெரிசல் ஏற்பட்டது.

அதுபோல, மக்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தவில்லை. கரூரில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடுதல் காவல்துறையினர் அண்டை மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டனர். பொதுவாக 50 பேருக்கு ஒரு காவல்துறை என்ற விகிதத்தில்தான் பணியமர்த்தப்படுவார்கள். ஆனால் கரூரில் 20 பேருக்கு ஒரு காவல்துறை என்ற விகிதத்தில் சுமார் 500 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

நெரிசல் ஏற்பட்டபோது, விஜய் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடவே காவல்துறையினர் மக்களை ஒழுங்குப்படுத்தினர். இதனை தடியடி நடத்தியத்கக் கூறுகிறார்கள்.

கரூர் மட்டுமல்ல, திருச்சி, திருவாரூர் என விஜய் பிரசாரம் மேற்கொண்ட எல்லா இடங்களிலும் பலர் காயமடைந்தனர். விக்கிரவாண்டி மாநாட்டில் 42 பே காயமடைந்தனர். மதுரையில் 16 பேர் காயமடைந்தனர் என்று ஏடிஜிபி கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *