‘திடீரென ரத்து செய்யப்பட்ட விஜய்யின் சென்னை பிரசாரம்!’ – பின்னணி என்ன? |TVK Vijay’s chennai campaign got cancelled in last minute

Spread the love

அதேமாதிரி, அண்ணா ஆர்ச் வழியாக வராமல் வடபழனி 100 அடி ரோடு வழியாகத்தான் தலைவரின் வண்டி வர வேண்டும் எனக் கூறிவிட்டனர். மேலும், ஸ்பீக்கர்கள் வைக்கக்கூடாது என்றும் வேனில் உள்ள ஸ்பீக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றனர். வில்லிவாக்கத்திலிருந்து தி.நகருக்கு 1 மணி நேரத்தில் தலைவரை எப்படி வர வைக்க முடியும். யதார்த்தம் புரிந்தும் காவல்துறை ஏன் இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்தது என தெரியவில்லை..அதுவும் முதலில் அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் யாரின் அழுத்தத்தின் பேரில் நெருக்கடி கொடுத்தார்கள்? தவெக சென்னையில் வலுவாகி வருவதை ஆளுங்கட்சியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் சில அதிகாரிகளை வைத்து எங்களை முடக்கப் பார்க்கின்றனர்’ என்றனர்.

சென்னையில் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கொடுப்பதில் கமிஷனர் அருண்தான் கட்டையைப் போடுவதாக தவெக தரப்பு சந்தேகிக்கிறதாம். அதனால்தான் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்து வரும் ஆதவ்வும் அருணுக்கு எதிராக வெளிப்படையாக கொந்தளித்திருக்கிறாராம்.

காவல்துறை தரப்பில் விசாரிக்கையில், ‘தவெகவினர் பிரசாரம் செய்யவிருக்கும் இடங்கள் சென்னையின் மிக முக்கிய பகுதிகள். அங்கே கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடுதான் அனுமதி கொடுக்க முடியும். அதை அடக்குமுறையாக நினைப்பது புரிதலற்ற போக்கே’ என்கின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் ‘எங்களை பிரசாரம் செய்யவிடாமல் முடக்குகிறார்கள்’ என்ற லைனில், தவெக தரப்பு பிரசாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *