சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கின்ற குழுவாகச் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது குழுவின் கருத்து, தமிழக மக்களின் கருத்து அதிமுக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும்.
எஸ்ஐஆர் ஒவ்வொருவருக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை.
ஆனால் எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. மத்திய அரசு கூர்ந்து கவனித்து பாமர மக்களும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் அமைக்கப்பட வேண்டும்.
எஸ்ஐஆர் காலக்கெடு நீட்டிக்க வேண்டும். இது மக்களின் கோரிக்கை. கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும்.