தினப்பலன்கள்: மேஷம் – மீனம்!

Dinamani2f2024 12 152fbxp2ab842f202409293232736.jpg
Spread the love

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

Dinapalan – 29.01.2025

மேஷம்:

இன்று பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் செய்வீர்கள். உடல் சோர்வோடு இருக்கும். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்:

இன்று உயர் படிப்புகளை நீங்கள் விரும்பும் துறையில் தொடரலாம். கலை மற்றும் நுண்கலைத் துறைகளில் தேர்ந்தெடுத்தால் சிறந்து விளங்கலாம். சற்று வருத்தமான மனநிலை இருக்கும். ஜுரம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். பொறுமை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்:

இன்று எதிர்கால நோக்கங்களை கருத்தில் கொண்டு உழைக்கத் தயாராகிவிடுவீர்கள். உங்களின் பொறுமையான செயல்பாடுகள் நல்ல பலனை அளிக்கும். எந்த முதலீடு பற்றியும் வாழ்க்கைத் துணையுடன் ஆலோசித்து முடிவெடுக்கவும். திடீர் கலகங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பேச்சில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

கடகம்:

இன்று குடும்பப் பிரச்னைகளை மனதில் கொண்டு வியாபாரம், அலுவலக இடங்களில் அதை வெளிப்படுத்த வேண்டாம். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வியாபாரத்தில் முதலீடுகள் செய்து மேன்மை பெறலாம். பொறுமை தேவை. கூட்டுத் தொழில் செய்யும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

சிம்மம்:

இன்று இடம், மனை வாங்க கடன் பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். பலனை எதிர்பாருங்கள். தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாங்களும் அரசின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஷேர் முதலீடுகள் செய்ய ஏற்ற காலமும் இதுதான். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி:

இன்று அலங்கார பதவிகள் வந்து சேரும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் மாட்டிக் கொள்ள நேரும். சொத்துப் பிரச்னைகள் இருந்தால் ஆரம்பத்தில் முன்கூட்டியே சரி செய்துவிடுங்கள். உங்களுடைய தங்களை பிரபலமடையச் செய்யும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

துலாம்:

இன்று எவருக்கும் கடன் தரவேண்டாம். பிரயாணங்களில் முழு எச்சரிக்கை தேவை. தீக்காயம், விஷபயம் ஏற்படும். உயர்கல்வி மற்றும் வெளியிடங்களில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அடிக்கடி சந்தித்து குடும்ப சூழ்நிலை குறித்துச் சொல்லி, அவர்கள் தவறான வழிகளில் செல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

விருச்சிகம்:

இன்று திறமைகள் வெளிப்படும். தான தருமங்களில் விருப்பம் உண்டாகும். உறவினர்களின் அர்த்தமற்ற எதிர்ப்புகளால் பட்ட கஷ்டங்கள் நீங்கும். அளவுக்கதிகமாக உள்ள குடும்பக் கடன்கள் தீரும். நீங்கள் விரும்பியபடி வாழ்க்கைத்துணை அமையும். ஸ்திர சொத்துக்களை வாங்குவதிலும் விற்பதிலும் பிரச்னைகள் வரக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

தனுசு:

இன்று நல்ல தன்னம்பிக்கையுடன் திடமான மனதும் இருக்கும். புதிய தொழில் தொடர்பாக வாழ்க்கைத்துணையுடன் பிரச்னைகள் ஏற்படும். எனவே உண்மை நிலையை அமைதியுடன் சமாளிக்கவும். நீங்கள் யோக, தியானங்களில் மனதை செலுத்துவது நல்ல பலன் தரும். மிகுந்த பலமுள்ளவராகவும் அனைத்து போட்டிகளிலும் ஜெயிப்பவராகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

மகரம்:

இன்று செலவுகளைக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நற்பலன் கிட்டும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

கும்பம்:

இன்று மூத்த சகோதரர்களின் உதவியுடன் அனைத்து பிரச்னைகளும் தீரும். அதிகாரிகள் சற்றே எதிர்பார்ப்புடன் காணப்படுவார்கள். செலவுகள் வந்தாலும் புகழும் சேர்ந்து வரும். அலுவலக வேலைகளில் முதன்மையானவர் என்று பெயரெடுக்கலாம். உடல்நிலை காரணமாக அதிக செலவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்:

இன்று எந்த அலுவலக வழக்கு விவகாரங்களிலும் ஈடுபடாதீர்கள். பிரச்னை வரலாம். அலுவலக அலைச்சல் அதிகமாகும். ஆய்வுகளுக்கு தங்களின் உதவி தேவைப்படும். தங்களின் திறமை மேலோங்கி நற்பெயர் பெறுவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை காணலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *