தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

Dinamani2f2025 01 312fz213c07e2fdinamani2024 08 233svj1nh2annamalai.avif.avif
Spread the love

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக, முதல்வர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

மொழிப் போரில் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும் என்று தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு விடியோவொன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்த விடியோவை குறிப்பிட்டு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதையும் படிக்க: முதல்வரை நேரில் சென்று வாழ்த்திய கமல்ஹாசன்!

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே?

மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *