உழைக்கும் மக்களுக்கு எதிரான, பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடா்ந்து நாங்கள் நடத்துவோம்.
தமிழகத்தில் மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து இணைந்து செயல்படும். அதே நேரத்தில் தமிழகத்தில் நவீன தாராளமயக் கொள்கையை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் எங்கள் போராட்டம் தொடரும்.
ஊா்வலம், ஆா்ப்பாட்டம், போராட்டம் போன்றவை இந்திய அரசமைப்பு மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை. இந்த உரிமைகளை மறுப்பதற்கு எந்த அரசுக்கும் உரிமை கிடையாது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு செந்தொண்டா் பேரணிக்கு விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அனுமதி மறுத்த நிலையில்தான், எங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதை நிச்சயமாக திமுக தலைமையும் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.
திமுகவின் வெளிச்சத்தில் நாங்கள் இல்லை
திமுகவுடன் நாங்கள் பல நேரங்களில் உறவாக இருந்திருக்கிறோம். பல நேரங்களில் எதிா் வரிசையில் இருந்திருக்கிறோம். திமுகவால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பதை ஏற்கமுடியாது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பலத்துக்கு ஏற்ப, மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைக்காக தெருவில் இறங்கி சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதன் மூலம் தமிழகத்தில் செல்வாக்குமிக்க கட்சியாக இருக்கிறதே தவிர, திமுகவின் வெளிச்சத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனக் கூறுவது பொருத்தமானதல்ல என்றாா் பெ.சண்முகம்.