திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் | Manoj Pandian Resigns MLA post and joins DMK

Spread the love

சென்னை: ஓபிஎஸ் ஆதர​வாள​ரான மனோஜ் பாண்​டியன் எம்​எல்ஏ, திமுக​வில் இணைந்​துள்​ளார். தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் தொகு​தி​ எம்​எல்​ஏ மனோஜ் பாண்​டியன். அதி​முக வேட்பாள​ராக போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற இவர், ஓ.பன்​னீர்​செல்​வத்​தின் ஆதர​வாள​ராக இருந்​து​வந்​தார். இவர் சட்​டப்​பேரவை முன்​னாள் தலை​வர் பி.எச்​.​ பாண்​டியனின் மகன் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

அதி​முக ஒருங்​கிணைப்​புக்​கான முயற்​சிகள் கைகூ​டாத நிலை​யில் சில மாதங்​களாகவே அதிருப்​தி​யில் இருந்த மனோஜ் பாண்​டியன், திமுகவில் சேர முடிவு செய்​தார். இதையடுத்து நேற்று சென்னை அறி​வால​யம் வந்த மனோஜ் பாண்​டியன், திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் திமுக​வில் இணைந்​தார்.

​பின்னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​து: திரா​விடக் கொள்​கைகள், தமிழர்​களின் உரிமை​களைப் பாது​காக்​கும் தலை​வ​ராக ஸ்டா​லின் இருக்​கிறார். என்​னுடைய எஞ்​சிய வாழ்க்​கை​யிலும் இந்த திரா​விட கொள்​கை​யைப் பாது​காக்​கும் இயக்​கத்​தில் பணி​யாற்ற வந்​துள்​ளேன். தொண்​டர்களின் உழைப்பை அங்​கீகரிக்​காதவர் பழனி​சாமி.

பாஜக வுடன் தற்​போது எந்த அடிப்​படை​யில் கூட்​டணி வைத்​தார் என்று தெரிய​வில்​லை. எந்​தக் கொள்​கைக்​காக அதி​முக உரு​வாக்​கப்​பட்​டதோ, அது காற்​றில் விடப்​பட்​டுள்​ளது. அதிமுகவை தொடங்​கிய எம்​ஜிஆர் மற்​றும் ஜெயலலி​தா, எந்​தச் சூழலிலும் கட்​சியை அடகு வைக்​க​ வில்​லை.

பாஜக​வின் கிளையாக அதிமுக செயல்​படு​கிறது. இவ்​வாறு கூறி​னார்​. இதற்கிடையே பி.எச்.மனோஜ் பாண்டியன் தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பேரவைத் தலைவர் மு.அப்பாவு அதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மனோஜ் பாண்டியன் கூறும்போது, ‘‘ஓபிஎஸ் மீது எனக்கு மரியாதை உண்டு. தொலைபேசியில் எனது முடிவை அவரிடம் சொல்லி இருக்கிறேன். மீண்டும் ஆலங்குளத்தில் நான் போட்டியிடுவது குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும்’’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *