திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசிய பிறகு அறிவாலயத்தில் பெ.சண்முகம் பேசியவை | P.Shanmugam Press Meet

Spread the love

திமுக – சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது.

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிவிட்டு சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பத்திரிகையாளர்களிடம் பேசியவை.

பெ.சண்முகம் பேசியதாவது, “மூன்றாம் கட்டமாக பேசி முடித்திருக்கிறோம். கடந்த முறையை விட அதிக சீட்டுகள் வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்.

நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் ஒரு முடிவை எடுப்பதில் சிரமமாக இருக்கிறது. எல்லா கட்சிகளின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை திமுகவுக்கு இருக்கிறது.

எங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் பேசிவிட்டு இன்று இரவுக்குள் ஒரு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் சுமுகமாக முடியுமென நினைக்கிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *