கலைஞர் – எம்.ஜி.ஆர் சந்திப்பு
இந்த நிபந்தனைளைக் கேட்ட பிஜு பட்நாயக் கலைஞரையும், எம்.ஜி.ஆரையும் சந்திக்க வைக்க சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்.
திமுக தரப்பில் கருணாநிதியும், பேராசிரியர் க.அன்பழகனும், அதிமுக தரப்பில் எம்.ஜி.ஆர், வி.ஆர். நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் சுமார் அரை மணி நேரம் கட்சியை இணைப்பது குறித்து தனியாகப் பேசியிருக்கிறார்கள்.

தோல்வியில் முடிந்த பிஜு பட்நாயக்கின் முயற்சி
இறுதியாக அதிமுக, திமுக கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை வெவ்வேறு இடங்களில் கூட்டி கட்சி இணைப்பு தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்ற முடிவை இருவரும் எடுத்திருக்கிறார்கள்.
எல்லாம் சுமுகமாக முடிந்தாலும் சந்திப்பிற்கு அடுத்த நாள் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர், திமுகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். இணைப்பு பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. திமுக – அதிமுகவை இணைக்க வேண்டும் என்ற பிஜு பட்நாயக்கின் முன்னெடுப்புகள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.