“திமுக, அதிமுக, தேசிய கட்சிகளுக்கு பாடம் கற்பிக்க எந்த முடிவையும் எடுப்போம்”-வேல்முருகன்| tamizhaga vazhvurimai katchi leader velmurugan warning political parties

Spread the love

இதனால், சமூக நீதி, சமத்துவம் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக்காக புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களும் இந்த அரசியல் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும்.

நான் தான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் 234 தொகுதிகளிலும் போட்டியிட தவாகவிற்கு கட்டமைப்பு உள்ளது.

வேல்முருகன்

வேல்முருகன்

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்குள் மற்ற அணிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

அவர் மக்கள் பிரச்சனைகளை பேசட்டும். விஜய் ஒரு பச்சைத்தமிழர். விஜய் அரசியலுக்கு வந்த போது, நான்தான் முதல் அரசியல்வாதியாக வரவேற்றேன். அதேபோல் விஜய் அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இந்த தேர்தலில் தவெக உடன் தவாக கூட்டணி இல்லை. திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளுக்கு பாடம் கற்பிக்க எந்த முடிவையும் கூட எடுப்போம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *