4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார்.
அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல.
சோதனைகளைக் கடந்து வென்றவர் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம்” எனப் பேசியிருக்கிறார்.