‘திமுக அரசு கஞ்சா அரசு; முதல்வர் ஸ்டாலின் ஒரு ரோபோ!’- ஆதவ் அர்ஜூனா கடும் தாக்கு! |DMK Govt Accused of Promoting Drugs; CM Stalin Called a ‘Robot’ – Aadhav Arjuna’s Sharp Criticism

Spread the love

TNPSC தேர்வை கூட முறையாக நடத்த முடியாத நிர்வாக திறனற்ற அரசுதான் இது. தேர்வு எழுத வந்தவர்கள் அத்தனை பேருக்கும் இழப்பீடு கொடுக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் துண்டு சீட்டை கொடுத்து முதல்வரை பேச வைக்கிறார்கள். ஒரு ரோபோ முதல்வரைத்தான் நம் மாநிலம் கொண்டிருக்கிறது.

2021 இல் அதிமுக ஆட்சியிலிருந்து போன போது நான்கரை லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது. இப்போது தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது திராவிட மாடலா? கடன் மாடலா? கேள்வி கேட்டால் பத்திரிகையாளர்களை அடிக்கிறார்கள்.

நேற்று ரத்தான தேர்வுக்கும் கே.என்.நேரு மீது பதியப்பட்ட வழக்குதான் காரணமா? யாருமே பதில் சொல்லவில்லை. இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொண்டு துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

கிரிஷ் சோடங்கர் என்கிற சுயமரியாதைமிக்க தலைவரை காங்கிரஸ் கூட்டணி பேச அனுப்பியிருக்கிறது. தவெகவின் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதும் திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருப்பதும் அவருக்கு தெரிகிறது. அதனால் அதிக சீட்களை கேட்கிறார். ஆனால், திமுக பேச்சுவார்த்தை குழுவை அமைக்காமல் அறிவாலய கதவை திறக்காமலேயே தாமதப்படுத்துகிறது.

எங்கள் தலைவர் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் உழைக்க தயாராக இருக்கிறார். தினமும் மக்களோடு மக்களாக நடக்க தயாராக இருக்கிறார். ஆனால், பிரசார வழிகாட்டு நெறிமுறைகள் என்ற ஒன்றை வெளியிட்ட திமுகவும் காவல்துறையும் எங்கள் தலைவரை முடக்குகிறது’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *