“திமுக அரசு புதுத் திட்டம் கொண்டு வந்தால், எடப்பாடி பழனிசாமிக்கு திகு திகு என எரிகிறது” – அமைச்சர் ரகுபதி| “Whenever the DMK government introduces a new scheme, Palaniswami gets anxiety,”- Regupathy

Spread the love

மக்களை ஏமாற்றும் காதில் பூ சுற்றும் வேலையை எல்லாம் செய்தவர், திமுக அரசின் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தைப் பற்றிப் பேசுவதற்கு அருகதை அற்றவர்.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை முதல்வர் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ தெரிவித்து மனுக்கள் மீது உரிய காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்பட்ட திட்டம்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.

மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொடர்புத் திட்டம் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அப்படி மக்களோடு நேரடி தொடர்பு கொண்ட திட்டம் எப்படி வெற்றி பெற்றதோ அதே போல ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டமும் நிச்சயம் வெற்றி பெறும்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பேரறிஞர் அண்ணா அவர்கள், மக்களிடம் செல் என்றார். அவரின் கொள்கையை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் திமுக அரசு, ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மக்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறது. மக்களைவிட்டு எப்போதுமே எட்டி நிற்கும் எடப்பாடிக்கு இந்தத் திட்டம் எட்டிக்காயாகத்தான் இருக்கும்!

அடிமை ஆட்சி நடத்திய பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் கொடுங்கனவுக்கு ஆளான அவலநிலையை மாற்றி, மக்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தியிருப்பது திராவிட மாடல் ஆட்சிதான்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு மக்களின் எண்ணம் அறிந்து செயலாற்றும் அரசு, அவர்களின் எண்ணங்களைச் செயல்படுத்தும் அரசு, இன்று தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றவும் திட்டம் தீட்டியிருக்கிறது.

திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களின் மீது அவதூற்றைப் பரப்புவதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் பழனிசாமி. வீண் அவதூறுகளைப் பரப்பிப் புலம்புவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்குப் பயனுள்ள கனவு எதையாவது வைத்திருந்தால் தெரிவிக்கட்டும்.

அதையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும். அடுத்த முதல்வர் நான்தான் என்ற பழனிசாமியின் கனவு மட்டும் எப்போதும் காணல் நீராகத்தான் இருக்கும்” என்று எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *