திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கொங்கு மண்டலம் மன்னிக்காது: வானதி சீனிவாசன்

Dinamani2f2024 032fb93320f0 1912 47bf A266 25a6df7747a62fvanathi093750.jpg
Spread the love

திமுக அரசின் அபரிமிதமான மின் கட்டண உயர்வாலும், சொத்து வரி, பதிவு கட்டண உயர்வாலும் 30 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, கோவையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற முறையில், மத்திய நிதியமைச்சருடன், தொழில்முனைவோர்கள் நேரடியாக சந்திக்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன். தொழில்முனைவோர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கோரிக்கைகள், ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுமையுடன் கேட்டு பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அப்போது நடந்த சாதாரண நிகழ்வை, பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேட திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சித்து வருகின்றன.

கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழ்நாட்டின் முதல்வரான மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மன்னிக்காது”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *