திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அரசு பெருமிதம்  | 43 lakh metric tons of paddy was procured annually during the DMK Rule

Spread the love

சென்னை: கடந்த 4 ஆண்டு திமுக ஆட்​சி​யில் தமிழகத்​தில் ஆண்​டுக்கு சராசரி​யாக 42.61 லட்​சம் மெட்​ரிக் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப் பு: கடந்த ஆட்​சி​யில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்​டு​களில் விவ​சா​யிகளிடம் இருந்து கொள்​முதல் செய்​யப்​பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 லட்​சத்து 51,469 மெட்​ரிக் டன். இதில் ஆண்​டுக்கு சராசரி​யாக கொள்​முதல் செய்​யப்​பட்ட நெல் 22 லட்​சத்து 70,293 மெட்​ரிக் டன் மட்​டுமே. ஆனால், திமுக ஆட்​சிப்​பொறுப்​பேற்ற 2021-ம் ஆண்​டுக்​குப்​பின் தற்​போது வரை 4 ஆண்​டு​களில் மொத்​தம் 1 கோடியே 70 லட்​சத்து 45,545 மெட்​ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்​டுக்கு சராசரி​யாக கொள்​முதல் செய்​யப்​பட்ட நெல் 42 லட்​சத்து 61,386 மெட்​ரிக் டன் ஆகும் .

அதாவது முந்​தைய ஆட்​சி​யை​விட இந்த அரசு 19 லட்​சத்து 91,093 மெட்​ரிக் டன் கூடு​தலாகக் கொள்​முதல் செய்​துள்​ளது. தமிழகத்​தில் நடப்பு நெல் கொள்​முதல் பரு​வம் செப்​.1-ம் தேதி தொடங்கி கொள்​முதல் செய்​யப்​பட்ட 10.40 லட்​சம் மெட்​ரிக் டன்​களில் 8.77 லட்​சம் மெட்​ரிக் டன் மாவட்​டங்​களுக்கு நகர்வு செய்​யப்​பட்​டு​விட்​டது. மீதம் 1.63 லட்​சம் மெட்​ரிக் டன் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளது. தின​மும் 1,000 மூட்​டைகள் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது. டெல்டா மாவட்​டங்​களில் நெல் கொள்​முதலுக்​காக 57 லட்​சத்து 63,203 சாக்​கு​களும், 58 மெ.டன் சணல்​களும், 28,856 பிளாஸ்​டிக் தார்ப்​பாய்​களும் இருப்​பில் உள்​ளன. தின​மும் 4,000 லாரி​கள் மூல​மாக​வும், 13 முதல் 15 ரயில்​கள் மூல​மாக​வும் நெல்​கள் கிட்​டங்​கி​களுக்கு தினசரி 35,000 மெ.டன் என்ற அளவில் நகர்வு செய்​யப்​படு​கிறது.

செப்​.1-ம் தேதி முதலே நெல் கொள்​முதல் பணி​களை முடுக்​கி​விட்டு உடனுக்​குடன் மாவட்​டங்​களுக்கு நெல்லை அனுப்​புவ​தி​லும்​ சிறப்​​பான பணி​களை மேற்​கொண்​டு விவ​சா​யிகளுக்​கு இழப்​பு ஏற்​ப​டா​மல்​ ​பாது​காத்​துவரு​கிறது என்​பதுதான் நிதர்​சன​மான உண்​மை​யாகும்​. இவ்​​வாறு அ​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *