ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்” என்றார்.
டிடிவி தினகரன் பேசுகையில், ‘மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி.
தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.
திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம்.
என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள்
தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை’ என்றார்.