தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் வயது 50 அவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளார் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர் தனது சொந்த கிராமத்தில் விவசாய செய்து வருகிறார்.
இந்நிலையில் விவசாய வேலை காரணமாக வயலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சை வந்த திமுக மாவட்ட செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகரின் கார் இருசக்கர வாகனத்தின் மோதியதில் சம்பவ இடத்திலேயே. உயிரிழந்தார் . விபத்து நடந்த இடத்தில் எம்எல்ஏவின் காரை முற்றுக்கையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் சம்பவத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இது தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவரின் உடலை பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் துரை சந்திரசேகரன் கார் பறிமுதல் செய்யப்பட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
