திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு சென்று விட்டு மீண்டு தஞ்சாவூர் திரும்பினார். காரை டிரவைர் ஓட்டியுள்ளார். அப்போது தென்னமநாடு, நடுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50) காருக்கு முன்னே சென்றுள்ளார். கார் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தென்னமநாட்டில் கோவிந்தராஜ் சென்ற டூவீலர் மீது கார் வேகமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து கோவிந்தராஜ்க்கு முதலுதவி செய்வதற்கு ஓடினர். துரை.சந்திரசேகரனும் காரை விட்டு இறங்கி சென்று பார்த்தார். ஆனால் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.