தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணிக்குள் இடம்பெற்றிருக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் திமுக- காங்கிரஸ் மோதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் சமயத்தில் இது போன்ற சலசலப்புகள் வரத்தான் செய்யும். முரண்கள் எழும்.
திமுக தலைமையிலான கூட்டணியிலும் இதுதான் நிகழ்கிறது. ஆனால் இறுதியில் சுமுகமான முறையில் தீர்வு காணப்படும்.
இதனால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பலவீனமானக் கூட்டணியில் போட்டி அதிகமாக இருக்காது. அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை இருக்காது.