திமுக – காங்கிரஸ் பஞ்சாயத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி – என்னதான் நடக்கிறது அங்கே? | DMK–Congress standoff: Madurai North constituency is on fire — what’s the ground reality?

Spread the love

‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ்

மதுரையில் கடந்த 25 ஆம் தேதி திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்டச் செயலாளரும், வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸை விமர்சித்துப் பேசியிருந்தார்.

அதாவது, “காங்கிரஸைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி எல்லாம் எம்.பி ஆகிவிட்டனர்.

இனி மற்றவர்கள் எம்.எல்.ஏ ஆனால் என்ன ஆகவில்லை என்றால் என்ன என்று சொல்லி அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

திமுக எம்எல்ஏ கோ. தளபதி

திமுக எம்எல்ஏ கோ. தளபதி

இதையெல்லாம் தலைமை புரிந்துகொண்டு அடுத்து இவர்களுக்கு எல்லாம் சீட் கொடுக்கவே கூடாது. நாம் இல்லையென்றால் இந்திய கூட்டணியே கிடையாது.

ஒரு தொகுதிக்கு 2 ஆயிரம் 3 ஆயிரம் ஓட்டுகள் தான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ்.

அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *