இங்கிருந்து ஒரு கூட்டத்தை அழைத்து கொண்டு போகலாம் என திட்டமிட்டிருக்கிறார். மாமல்லபுரத்தில் படகில் சென்ற போது கடலில் படகு கவிழந்தபோது உடன் வந்த நண்பர் சத்யா தோளை பற்றிக் கொண்டேன் என உயிரை காப்பாற்றினாய் என்று நான் சொன்னேன் அப்படி சொன்னது உண்மை, 3 முறை காப்பாற்றியதாக மல்லை சத்யா கூறிய நிலையில் மற்ற 2 இடங்கள் எங்கே என்று தெரிவிக்க வேண்டும்.
மல்லை சத்யா 2 ஆண்டுகளில் 7 முறை வெளிநாடு சென்றுள்ளார். இதுவரை எனக்கு தகவல் சொல்லவில்லை, என்னைச் சந்திக்கவும் இல்லை. மதிமுக கட்சியில் இருக்கிறேன். துணைப் பொதுச் செயலர் பதவியில் இருக்கிறேன் என பதிவு செய்யவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது மதிமுக. அதைத் தடுத்து நிறுத்தியவர் பெயர்தான் வைகோ. திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும், திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் இது என் கட்டளை என்றார் வைகோ.
நிகழ்வில் கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுன்ராஜ், பொருளாளர் செந்திலதிபன், கொள்கை விளக்க அணிச்செயலர் ஆ.வந்தியத்தேவன், அரசியல் ஆய்வு மையச்செயலர் இரா. அந்திரி தாஸ், தீர்மானக்குழு செயலர் மணிவேந்தன், தணிக்கை குழு உறுப்பினர் செந்தில் செல்வன், சிறுபான்மை பிரிவுச்செயலர் சிக்கந்தர், மகளிரணி செயலர் மல்லிகா தயாளன், சென்னை மண்டல மாவட்டச் செயலர்கள் சு.ஜீவன், குமார், டி.சி. ராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், பாரத் ராஜேந்திரன், லோகநாதன், ஆவடி சூரியகுமார், கருணாகரன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அட்கோ மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.