“இந்திய கூட்டணி வலிமையாக இருக்கிறது. இதை அசைத்துப் பார்ப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் யாராலும் அசைக்க முடியாது.
ஒவ்வொருவரும் கருத்து சொல்வதற்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் இருக்கிறது.
நான் ஒரு தலைவராக இருந்துகொண்டு பொதுவெளியில் பேச முடியாது. சீட் வேண்டும், நினைப்பது கிடைக்க வேண்டும் என்றால் கேட்க வேண்டியவர்களிடம் கேட்க வேண்டும். மீடியா முன்பு கேட்டால் கிடைக்குமா?
மாணிக்கம் தாக்கூர் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.

எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை தெளிவாக இருக்கிறது.
நாங்கள் தி.மு.க-வைத் தவிர எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஸ்டாலின் ஆகியோர் கூட்டணி குறித்துப் பார்த்துக்கொள்வார்கள்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான இடங்களை நாகரிகமாகக் கேட்டுப் பெறுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.