அப்போது, அங்கிருந்த மின்கம்பம் அருகில் இரும்புக் குழாயில் திமுக கட்சிக் கொடியைக் கட்டி, நடுவதற்கு முயன்றபோது கொடிக் கம்பம் மின்சார கம்பியில் உரசியதால் நாகராஜன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து சக தொழிலாளா்கள் நாகராஜனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
அங்கு நாகராஜனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருந்த கொடிக்கம்பங்களை திமுகவினர் அப்புறப்படுத்தினர்.