திமுக முன்னாள் எம்.பி.வீட்டில் 300 சவரனை அள்ளி சென்ற திருடன்: கோடிகணக்கில் கொள்ளை போனதால் பதற்றம் – Kumudam

Spread the love

திமுகவின் டெல்லி பிரதிநிதி மாநில விவசாய அணி அனுப்பிரிவு செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் வீடு தஞ்சையில் உள்ள சேகரன் நகர் பகுதியில் அமைந்துள்ளது அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்ததால் அவரது வீடு பூட்டி இருந்துள்ளது.

 இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு அவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து  வைர நகைகள் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் ரொக்க பணம் என 300 பவுனுக்கு மேல் திருடப்பட்டு உள்ளது என்பது கூறப்படுகிறது இதனால் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மோப்பநாய் உதவியுடன் கைரேகை நிபுணர்களுடன் தற்போது சோதனை செய்தனர்.

 மேலும் திமுகவின் முக்கிய நிர்வாகியான ஏ கே எஸ் விஜயன் அவரது இல்லத்திலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட காவல்துறையினர் திருடனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *