கட்சி பொதுக்குழுக்களில் முரசொலி மாறன் சில கருத்துக்களை முன்வைப்பார். முரசொலி மாறன், கருணாநிதியின் எண்ணத்தைப் பேசக்கூடியவர் என்பதால் எதிர் கருத்தை யாரும் முன்வைக்க மாட்டார்கள். ஆனால் எல்.ஜி, முரசொலி மாறன் பேசியதில் உள்ள நிறைகுறைகளை வெளிப்படையாக எடுத்து வைப்பாராம்.
மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். கருணாநிதியுடன் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக வைகோவுடன் சென்று மதிமுகவில் இருந்தார். எதிர் அணியில் இருந்தாலும் கருணாநிதி, எல்.ஜி மீது தனிப்பட்ட முறையில் பாசம் காட்டினார்.
பின்னர் மீண்டும் கருணாநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டவருக்கு உரிய அங்கீகாரம் தந்தார் கருணாநிதி. கல்வி ஆற்றல், பேச்சாற்றல் மிக்க எல்ஜியின் பேச்சை கருணாநிதியே பலமுறை ரசித்து பாராட்டியிருக்கிறார்.

கண்ணந்தகுடி கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து அன் அப்போஸ்ட் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரத்தநாட்டில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாவதற்குக் காரணமானவர். இவரால் டாக்டர், இன்ஜீனியர், வழக்கறிஞராகப் பலர் உள்ளனர்.
பலர் அரசுப் பணி பெற்றுள்ளனர். பொதுவாழ்வில் மட்டுமல்ல அரசியலிலும் தூய்மையாக இருந்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல்.ஜி.அண்ணாவுக்கு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார் எல்.ஜி. அது நடக்கவில்லை.
அப்போது, ‘தலைவர் ஸ்டாலின் உன்னை கைவிட மாட்டார், வரும் சட்டமன்றத் தேர்தலில் உனக்கு வாய்ப்பு வழங்குவார்’னு பல உதாரணங்களை முன் வைத்து அண்ணாவுக்கு நம்பிக்கையளித்துப் பேசினாராம்.
மூன்று முறை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ, எம்.எல்.சி, ராஜ்யசபா எம்.பி, திருச்சி மக்களவை எம்.பி உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அரசியலில் இன்னும் பல உயரம் தொட்டிருக்க வேண்டியவர், இப்போது எட்டாத உயரத்திற்குச் சென்று விட்டார்’ என்றனர்.