கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20% – 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இதெல்லாம் “Tip of the Iceberg” தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.
வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான தி.மு.க நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் “கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்” தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

ஏற்கனவே அமலாக்கத்துறை அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு.
தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.