இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பி.எஸ்-ஸை, தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து தி.மு.க-வின் உறுப்பினர் படிவத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஓ.பி.எஸ்-ஸை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், “திராவிட இயக்கக் கொள்கைகளை வலுப்படுத்தவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

தி.மு.க-வில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “அ.தி.மு.க இன்று ஒரு சிலரின் பிடியில் சிக்கிச் சிதைந்துவிட்டது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு அங்கே மதிப்பில்லை. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்திற்கே. எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் முறைப்படி சபாநாயகரிடம் ராஜினாமா செய்துள்ளேன்.” எனறார்.