திமுக வேட்பாளர் பட்டியல்: ஆளுமை செலுத்திய மண்டல பொறுப்பாளர்கள்; ‘அப்ருவல்’ கொடுத்த முதல்வர்! | Regional Coordinators Exerted Dominance over DMK Candidate List

Spread the love

நேரு பொறுப்பாளராக உள்ள டெல்டா மண்டலத்தில் தனது ஆதரவாளர்களை தவிற வேறு யாரும் உள்ளே வராதபடி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளார்.

மற்றொருபுறம் அமைச்சர் மனோ தங்கராஜ், மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவருக்கும் வாய்ப்ப மறுக்கப்பட்டுள்ளது.கனிமவள விவகாரத்தில் சிக்கியதால், மனோதங்கராஜ்க்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது. செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தினால், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதவிக்கு வேட்டாகியுள்ளது.

மற்றொருபுறம் தென் மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை வாங்கியிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் வேட்பாளர் கிருத்திகாவின் கணவர் போக்சோ வழக்கில் சிக்கியிருக்கிறார். ஏற்காடு வேட்பாளர் ரேவதி யார் மூலம் சீட் வாங்கினார் என்று தெரியும்.

வேலுவின் தயவு அவருக்கு பெரிதாக இருந்தது.அதே போல் கட்சியின் பொறுப்பில் இருந்து துாக்கப்பட்ட திருநெல்வேலி அப்துல் வஹாபிற்கும், நாகப்பட்டினம் நிவேதா முருகனும் சீட் வாங்கியுள்ளார். கொங்கு மண்டலத்தில் தனது கண் அசைவு இல்லாமல் யாரும் சீட் பெற முடியாத நிலையை செந்தில் பாலாஜி உருவாக்கினார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ஒப்புதலை வாங்கி கச்சதமாக தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் வாங்கியுள்ளார் இந்த மண்டல பொறுப்பாளர்கள். பென் நிறுவனம், ஐ-பேக், உளவுத்துறை என ஆளுக்கு ஒரு லிஸட்டை கொடுத்த போதும், கடைசி நேரத்தில் கட்சிகாரர்களின் கரமே, தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் ஓங்கியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *