திமுக VS காங்கிரசு: ஆள் இல்லாத கட்சி காங்கிரசு, திமுகவுக்கு அதிகார தீமிர்: வார்த்தை போர் உச்சகட்டம் – Kumudam

Spread the love

திமுக எம்எல்ஏ தளபதி காங்கிரசை ஆளில்லாத கட்சி என்று விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அதிகார தீமிருடன் இருந்தால் தோழை கட்சிகள் அமைதியாக இருக்கும் கால முடிந்துவிட்டது என மாணிக்கம் தாகூர் எம்பி பதிலடி கொடுத்துள்ளார். 

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று இரவு திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி, காங்கிரசில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை சொல்ல எனக்கு என்ன பயமா ? மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரை தான் சொல்கிறேன். அவர்கள் எம்பியாகிவிட்டார்கள். அவர்கள் இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். 

அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது.அதற்கு நம்மால் ஆன காரியங்களை செய்ய வேண்டும். நான் எதற்காக சொல்கிறேன் என்றால், நாம் உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியை காப்பாற்றி கொண்டு இருக்கிறோம். 

நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு ரூ.3000், 4000 ஓட்டுதான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது” என்று விமர்சனம் செய்துள்ளார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று  அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என மாணிக்கம் தாகூர் எம்பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். 

தளபதி தற்போது மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *