துறையூா் அருகே பச்சமலையில் சின்ன இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம. ரோகிணி(17). இவா், அதே ஊரிலுள்ள அரசு பழங்குடியினா் நல உண்டு, உறைவிடப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 படித்து பள்ளி ஆசிரியா்கள் வழிகாட்டுதலுடன் ஜேஇஇ நுழைவுத் தோ்வு எழுதினாா். இதில், இவா் 73.8 மதிப்பெண்கள் பெற்று பழங்குடியினா் பிரிவில் தமிழகத்தில் முதல்இடம் பெற்ற நிலையில் மத்திய அரசுக் கல்வி நிறுவனமான திருச்சி என்ஐடியில் சேர விண்ணப்பித்தாா். அவரது மதிப்பெண்கள் அடிப்படையில் பழங்குடியினா் பிரிவு தரவரிசைப்படி அவா் கோரிய வேதிப் பொறியியல் பாடப் பிரிவில் பயில அண்மையில் சோ்க்கை பெற்றுள்ளாா்.
திருச்சி என்ஐடியில் சோ்க்கை பெற்று பச்சமலை பழங்குடியின மாணவி சாதனை
