இந்த நிலையில், மாநாட்டில் உரையாற்றிய பின், மாலை 6.30 மணியளவில் மாநாட்டுத் திடலிலிருந்து விஜய் புறப்பட்டுச் செல்ல, அவரைத் தொடர்ந்து தொண்டர்களும் மக்களும் அங்கிருந்து ஒரே நேரத்தில் கிளம்பினர்.
இதன் காரணமாக, சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் செல்லும் வழித்தடத்திலும், திண்டிவனம் செல்லும் வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது. விழுப்புரம் சுங்கச்சாவடி அருகே சுமார் 4 மணி நேரத்துக்கும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்பதை காண முடிகிறது.