திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் நடைபெற்று வருகின்றன.
இங்கு வரும் பயணிகளில் பெரும்பாலோர் தொழில்கள், வேலைகள், சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவாக இருக்கிறார்கள். இதனால் திருச்சி விமான நிலையம் எப்போதும் பிஸியாகவே இருக்கும்.
அப்படியே, சர்வதேச நாடுகளிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப்பொருட்கள் போன்றவற்றை கடத்த முயற்சிப்பதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில், உயிருடன் உள்ள 2,800 ஆமை குஞ்சுகள் கடத்த முயற்சிக்கப்பட்டது தெரிய வந்தது.