திருச்சி: ‘முறையாக சிகிச்சை அளிக்காததால் நான்கரை வயது மகன் பலி’ – சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டு – trichy child dead!

Spread the love

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த சிறுவனின் பெற்றோர் கூறுகையில்,

“கண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சேர்த்து இந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. என் குழந்தை போல சுற்று வட்டார கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்படக்கூடாது. அவசர உதவிக்கு சென்றால் கூட மருத்துவ செவிலியர் யாரும் பணியில் இருப்பதில்லை. இங்கு, இருக்கக்கூடிய செவிலியர் குடியிருப்பில் செவிலியர்கள் தங்குவதில்லை. முதல் உதவிக்கு சென்றால் மருத்துவர்கள் இருப்பதில்லை.

எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக முழு நேரமாக செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். அல்லது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில், இந்த சிறுவன் இறந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *