திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி | cm Stalin announces Rs. 2 lakh financial assistance for the death of 2 people after an elephant attacked a temple in Tiruchendur

1340802.jpg
Spread the love

சென்னை: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் 18-11-2024 அன்று யானையின் அருகில் இருந்தபோது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசித் தாக்கியுள்ளது. இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்றும், பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *