`திருச்செந்தூர் தொகுதியை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது' – அனிதா ராதாகிருஷ்ணன்

Spread the love

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், ”தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுப் பேசினர். முதலில் பேசிய மனோஜ் பாண்டியன், “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை எனப் பேச எடப்படி பழனிசாமிக்கு அருகதை இல்லை.

மனோஜ் பாண்டியன்

அவர் முதல்வராக இருந்த போதுதான் கொடநாடு கொலை, கொள்ளை நடந்தது. கொடநாடு என்றாலே நடுங்குபவர்தான் எடப்பாடி பழனிசாமி. அந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டனை பெற்று மீண்டும் அவர் எந்த பதவிக்கும் வர முடியாத நிலை ஏற்படும். தன்னை பாதுகாக்க தமிழகத்தையே அடகு வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க என்ற கட்சி திராவிடக் கொள்கையை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தி.மு.கவை வீழ்த்தி விடலாம் என பா.ஜ.கவினர் கங்கணம் கட்டிம் கொண்டு சுற்றி வருகிறார்கள். எந்தக் கொம்பனாலும் தி.மு.கவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. எனக்கு 6 முறை எந்த இடத்திலும் தனிகுனிவை ஏற்படுத்தி விடாமல் வெற்றி பெற வைத்தவர்கள் திருச்செந்தூர் தொகுதி மக்கள்.

அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் தொகுதியை வீழ்த்திவிடலாம் என பா.ஜ.கவினர் சுற்றி வருகிறார்கள். இந்த பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் விட்டுக் கொடுப்பார்களா? சிறுபான்மை மக்களும், வி.சி.கவினரும் அ.தி.மு.க, பா.ஜ.கவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.கவுடன் சேர்ந்த போதே அ.தி.மு.க காலாவதி ஆகி விட்டது.” என்றார்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *