திருத்தணி: “அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்”- திருமாவளவன்| thirumavalavan about thiruthani issue

Spread the love

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்தச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச்செயலை “ரீல்ஸ்’ என்னும் பெயரில் காட்சிப் பதிவாக சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *