திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கர்க் விளக்கம் |Ig asra garg on minors attack north indian youth in thiruthani

Spread the love

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர்.

இன்று இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

“டிசம்பர் 27 ஆம் தேதி திருத்தணியில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. ரயிலில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டார் எனக் கூறப்படுவது தவறு. முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி இல்லை அவர், 2 மாதங்களாக பல இடங்களுக்கு சென்றுள்ளார். ஒடிசாவை சேர்ந்தவர் அவர்.

சென்னையில் இருந்து திருத்தணிக்கு இளைஞர் சென்ற நேரத்தில் 4 சிறுவர்கள் உடன் இருந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் நேற்று முன்தினம்( டிச.28) கைது செய்யப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *