தங்களது விசாரணை முடிவுகளை டிசம்பர் 2-ம் தேதிக்குள் மூடிய கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய புகார்தாரரும், தேவஸ்தானத்தின் உதவி பாதுகாப்பு அலுவலருமான சதீஷ் குமார், 2023 நவம்பர் 10 அன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை முதற்கட்ட தகவலில் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், விசாரணை அமைப்புகளும் தங்கள் விசாரணை முடிவுகளை டிசம்பர் 2 அன்று உயர் நீதிமன்றத்தில் மூடிய கவர்களில் சமர்ப்பித்தன. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரவிக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “கடந்த 2023 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ. 100 கோடியை திருடியது உண்மைதான். நீதிமன்றம் எத்தகைய ஆய்வுக்கு உத்தரவிட்டாலும் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். என்னை மேலும் துன்புறுத்தாதீர்கள். நானும் என் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலில் இருக்கிறோம்.