நடிகை கயாது லோஹர் திருமலையிலுள்ள ஏழுமலையான் திருக்கோயிலிலியில் வழிபாடு நடத்தியுள்ளார்.
பாரம்பரிய உடையணிந்து திருமலைக்கு வருகை தந்திருந்த கயாது லோஹருடன் அங்கிருந்த பக்தர்கள் பலர் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். அவரும் ஒருசில ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
விஐபி தரிசன டிக்கெட் மூலம் அவர் சுவாமி தரிசனம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலிருந்து வழிவகை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ‘டிராகன்’ திரைப்படம் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை, அதிலும் குறிப்பக இளசுகளை கயாது லோஹர் தன்வசப்படுத்தியுள்ளார். தமிழில் அவரது எடுத்த படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.