திருப்பதி: திருமலை மற்றும் திருப்பதியில் அக்டோபா் 16-ஆம் தேதி கனமழை பெய்யக் கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையால், பக்தா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 16-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
எனவே, அக்டோபா் 15-ஆம் தேதி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பக்தா்கள் இதை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.