திருப்பதி பிரம்மோற்சவம்: இவ்வளவு லட்டுகள் விற்பனையா?

Dinamani2f2024 10 122fk8rmyxqo2fscreenshot 2024 10 12 191436.png
Spread the love

திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் 30 லட்சம் லட்டுகள் வரை விற்பனையானதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மாண்ட பிரம்மோற்சவ நிகழ்வு 9 நாள்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்டு வாகன சேவை தரிசனத்தை மேற்கொண்டாதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வின் கடைசி நாளான இன்று, கருட சேவை தரிசனத்தைக் காண மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் முதல் 8 நாள்களில் ரூ. 50 -க்கு விற்கப்படும் சிறிய லட்டுகள் மட்டும் 30 லட்சம் வரை விற்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: திருப்பதி லட்டுகளின் தரம் மேம்பட்டுள்ளதாக பக்தா்கள் மகிழ்ச்சி: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

கடந்த ஆண்டிலும் இதே அளவிலான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தேவஸ்தானத்தின் பத்திரிகை வெளியீட்டில் இந்த ஆண்டில் தற்போது வரை உண்டியல் வசூல் ரூ. 26 கோடி வரை வந்துள்ளதாகவும், சென்ற ஆண்டை விட ரூ. 2 கோடி அதிகமாக வசூலானதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த ஆண்டு 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: திருமலை பிரம்மோற்சவம்: அனுமந்த வாகனம், தங்கத் தேரில் மலையப்ப சுவாமி பவனி

ஸ்ரீ வாரி சேவகர்கள் எனப்படும் தன்னார்வலர்கள் 7 மாநிலங்களிலிருந்து மொத்தம் 3,300 பேர் கடந்தாண்டு சேவை செய்துள்ளனர். அது, இவ்வாண்டில் 4,000 பேராக அதிகரித்துள்ளது.

பக்தர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க 45 மருத்துவர்கள், 60 மருத்துவப் பணியாளர்கள், 13 ஆம்புலன்ஸ்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான அக். 4 அன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநில அரசின் சார்பில் ஸ்ரீவாரி கோயிலுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.

இதையும் படிக்க: திருப்பதி பிரம்மோற்சவம்: பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் சந்திரபாபு நாயுடு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *