திருப்பதிக்கு செல்லவிருந்த ஜெகன்மோகன் ரெட்டி, தனது வருகையை ரத்து செய்துள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாகக் கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் விதமாக சனிக்கிழமையில் (செப். 28) நடக்கவிருக்கும் சடங்குகளில் கலந்து கொள்ளுமாறு, மக்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், திருப்பதிக்கு செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால், தனது வருகையை ரத்து செய்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்ததாவது “மாநிலத்தில் அரக்கர்களின் ஆட்சிதான் நடக்கிறது. திருமலை கோயிலுக்கு எனது வருகையைத் தடுக்க அரசு முயற்சிக்கிறது.
கோயிலுக்கு வருகை தரவிருந்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த அறிவிப்பில திருமலை கோயிலுக்கு வருகை அனுமதிக்கப்படவில்லை என்றும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு தேவையான ஒப்புதல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.