மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, பின்வரும் பணிகளைத் தொடங்கி நிறைவேற்றி வருகிறது:
சேதமடைந்த தார்சாலைகளை முழுமையாக அகற்றி புதிதாக லேயர் அமைத்தல்
ஆழமான குழிகளை மூடுதல்
கழிவுநீர் கால்வாய் பகுதிகளைச் சீரமைத்தல்
சாலை பழுதுபார்ப்பு முடிக்கப்பட்டதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், “எங்களுக்கு இதுதான் ஸ்கூல், காலேஜ் போறதுக்கு முக்கியமான வழி. ஆனா இந்த ரோடு சரியில்லாததால வேற வழி மாறி பல கிலோமீட்டர் சுத்திட்டுப் போவோம். இதுவே தினம்தினம் போராட்டமா இருந்துச்சு! ஆனா இனி அந்தப் பிரச்னை இல்லை. இனிமே தினமும் இதே வழியில நிம்மதியாவும் பாதுகாப்பாவும் போவோம்” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.