திருப்பத்தூர்: 11 பேர் பலி: 40 பேர் படுகாயம்; திருப்பத்தூர் பேருந்து விபத்து | 11 killed, 40 injured in Tirupattur bus accident |

Spread the love

காரைக்குடி – திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்தப் பதபதைக்க வைக்கும் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் பேருந்து விபத்து

திருப்பத்தூர் பேருந்து விபத்து

இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மீட்கப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவம் அறிந்த, விபத்துக்குள்ளான பேருந்துகளில் பயணித்த பயணிகளின் உறவினர்கள், சிவகஙகை, காரைக்குடி, திருப்பத்தூர் மருத்துவமனைக்கு கதறியபடி வந்துகொண்டிருக்கின்றனர்.

இதுவரை 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இறந்தவர்களின் பெயர் விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *