திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா தொடங்கியது!

Dinamani2f2024 11 022f0ku3sufs2fmurugan Temp.jpg
Spread the love

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

கந்த சஷ்டி விழாவானது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 7 நாள்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி காலை 8.30 மணிக்கு அனுக்கை பூஜை,துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று,காலை உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி,தெய்வானை,சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி,தெய்வானை,உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து காலை 9 மணிக்கு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்புகட்டிய பக்தர்கள் பால்,மிளகு,துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். பக்தர்கள் தினமும் காலை,மாலை சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர்.விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும்,மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.தினமும் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளிப்பார். இதேபோல வரும் 7 ஆம் தேதி வரை சுவாமி உற்சவர் சன்னதி யிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருள்வார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல் வாங்குதல் நிகழ்ச்சி வரும் 6 ஆம் தேதி இரவு 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் நடைபெறுகின்றது. மறுநாள் 7 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.விழாவின் விழாவின் நிறைவு நாளான 7 ஆம் நாள் நிகழ்ச்சியாக 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறிய சட்டத் தேரோட்டமும்,மாலை 3 மணியளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *