திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!

Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், விஷேச சாந்தி நடைபெற்று 6 ஆம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்றது. அதன்பின்னர், மாலை 5 மணிக்கு 7 ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

குடைவரைக் கோயிலான திருப்பரங்குன்றத்தில் 14 ஆண்​டு​களுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடை​பெறுவதையொட்​டி, கடந்த சில மாதங்களாக திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. ரூ.2.44 கோடி​யில் ராஜகோபுரத்​தில் 7 தங்க கலசம், அம்​பாள் சந்​நிதி மற்​றும் கணபதி கோயி​லில் தலா ஒரு கலசம் என 9 கலசங்​கள் அமைக்கப்பட்​டன.

நேற்றிரவு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து, தர்ப்பைக் கயிறு, பட்டு நூல் கொண்டு சுவாமிக்கு சக்தி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி, மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். மாநிலம் முழுவதுமிருந்து பக்தர்கள் குவித்திருப்பதால் கோயில் நகரமாக மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

குடமுழுக்கை முன்னிட்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க 3.45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க 7 நிலை கொண்ட 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அதிகாலை முதலே கோயில் வளாகத்தில் குவிந்திருந்த பக்தர்கள் பரவசமடைந்து “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா… வீரவேல் முருகனுக்கு அரோகரா…” என கோஷம் எழுப்பினர்.

10-க்கும் மேற்பட்ட ட்ரோன்​கள் மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட புனித நீரை பக்​தர்​கள் மீது தெளிக்கவும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

Thiruparankundram Kudamuzhu celebration

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *